சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் காரைக்குடி கடற்கரையில் அவரது உருவத்தை சனியம்மை அளவில் வரைந்து அனைவரையும் அசத்தினர். மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு டஃப் கொடுக்கும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் உருவத்தை தரங்கம்பாடி கடற்கரையில் தத்ரூபமாக வரைந்துள்ளார், அவரது ரசிகை. நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. திரைக்கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில், மணல் சிற்ப கலைஞரும், சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற நிர்வாகியுமான துர்கா என்பவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் சிவகார்த்திகேயன் மணல் சிற்பத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற இயக்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டனர்.