சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கியிருக்கும் இப்படம் ஃபேன்டஸி ஆக்ஷன் த்ரில்லர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிவராஜ்குமார் பேசியதாவது:-

சென்னைக்கு வரும்போதெல்லாம் உள்ளுக்குள் சந்தோசம், பிறந்து, படித்தது, வளர்ந்தது இங்குதான் பல இனிய நினைவுகள் உண்டு. சென்னையில் இருந்தபோதுதான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஹீரோவாக நினைத்ததில்லை. ஹீரோவாக இருந்தால் கமல்ஹாசன், அமிதாப் போல இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் என் அப்பா என்று கூட அழைக்க மாட்டார்கள். நான் பெண்ணாக பிறந்திருந்தால் உன்னை எப்படியாவது திருமணம் செய்திருப்பேன் என்று பல மேடைகளில் சொல்லியிருக்கிறேன். நானும் சினிமாவுக்கு வந்தேன்.
நான் பல தோல்விகளையும் பல வெற்றிகளையும் கண்டிருக்கிறேன். நான் எதையும் மனதில் கொள்ளவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ மரணங்களையும், வீழ்ச்சிகளையும் கண்டிருக்கிறேன். தலையில் அறுவை சிகிச்சை முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் கடந்து வந்துள்ளேன். இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் எனக்காக பிரார்த்தனை செய்தனர். நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கதை சொன்னவுடனே இந்தப் படம் பிடித்துவிட்டது. அர்ஜுன் படத்தை மிக சிறப்பாக இயக்கியுள்ளார்” என்றார் சிவராஜ்குமார்.