சென்னை: பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி தம்பதிகளுக்கு கடந்த ஜனவரியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு ‘காதல்’ மற்றும் ‘கவிதை’ என்று அழகான தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டன. தற்போது கன்னிகா தனது குழந்தைகளுடன் எடுத்த போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோஷூட் தீபாவளி சிறப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரட்டை குட்டீஸும் ஒரே மாதிரி பாவாடை தாவணியில், கையில் மத்தப்பூ வைத்தபடி க்யூட் சிரிப்புடன் போஸ் கொடுத்துள்ளனர். ரசிகர்கள் இதனை பார்த்து “கண்ணு பட போகுது, சுத்தி போடுங்க!” என அன்பான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் “குட்டீஸின் சிரிப்பு நம் மனதை உருக்குது” எனப் பாராட்டுகின்றனர்.
பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பெற்ற சினேகன், ‘பாண்டவர் பூமி’ படத்திற்காக எழுதிய “தோழா தோழா” பாடலால் பெரும் புகழ் பெற்றவர். அவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் ரசிகர்களிடையே “கட்டிப்பிடி சினேகன்” என்ற பெயரால் பிரபலமானார்.
சினேகனும் கன்னிகாவும் 7 ஆண்டுகள் காதலித்து 2021ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுத்தார். தற்போது தங்கள் இரட்டை மகள்களுடன் வாழ்ந்து வரும் இத்தம்பதியினர், குடும்ப நிமிடங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த புதிய போட்டோசேட் அவர்களின் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது.