சென்னை: சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவின. ஆனால் இந்த தகவலை சோனாக்ஷி சின்ஹா மறுத்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
இவர் பல வருடங்களாக காதலித்து வந்த சாஹீர் இஃபால் என்ற நடிகரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குகள் ஏதுமின்றி எளிய முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவின. ஆனால் இந்த தகவலை சோனாக்ஷி சின்ஹா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “நண்பர்களே, நான் கர்ப்பமாக இல்லை என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். நான் இப்போது கொஞ்சம் குண்டாகிவிட்டேன் அவ்வளவு தான்” என்று தெரிவித்துள்ளார்.