சென்னை: நடிகை சோனா சினிமாவில் இருந்து விலகி, தற்போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கி இருந்தாலும், தற்போது தனது பயோபிக் படமான “ஸ்மோக்” மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார். இந்த படத்திற்கான புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்தப் பணிகளின் போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து வருகிறார். இது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை சோனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகப் புகழ் பெற்றவர். பல படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், அவர் கவர்ச்சி நடிகையாக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு, ரசிகர்களிடமும் திரைத்துறையிலும் பெரும் கவனம் பெற்றார். இதன் பின்னர், பல படங்களில் கிளாமர் டிராக் காட்சிகளிலும், கிளாமர் பாடல்களிலும் நடனமாடினார்.
இந்த நிலையில், நடிகை சோனா காரைக்குடியில் விஷால் உடன் ஒரு பாடலுக்காக ஆடும் போது நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த அனுபவம் தற்போது வேகமாக பரவி வருகிறது. சோனா, “எனக்கே அலுத்துப் போச்சு.. உங்களுக்கு அலுத்துப் போகலயா? இப்ப யாரு கேட்டாலும் நோ சொல்லீடுவேன்” என கூறினார்.
சோனா காரைக்குடியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே படப்பிடிப்பு நடைபெற்றது. இரவு நேரத்தில் அந்த படப்பிடிப்பு நடந்தது. சோனா, மேக்-அப் செய்து, தயாராக இருக்கும்போது, அந்த ஊரின் 400 ஆண்கள் படப்பிடிப்பு இடத்தில் கூடியிருந்தனர். அப்போது, சோனா உடனே துணியை எடுத்து போர்த்திக் கொண்டு ஓடிவிட்டார். “அப்படி இருக்கும்போது, எப்படி நடிக்க முடியும்?” என கூறினார்.
விஷால் இந்தத் தடையை தாண்டி சோனாவை நம்பிக்கையூட்டினார். “நான் இருக்கிறேன். உனக்கு முன்னால் நான் இருப்பேன். நான் ஆடும்போது நீ கூட்டத்திற்கு தெரியமாட்டாய்” என்று கூறி மேலும் சோனா அறிமுகமாகி ஆடினபோது, அந்த 400 ஆண்களும் திரும்பிப் பார்த்தனர். பிறகு, இந்த கூட்டம் இரண்டாவது நாளில் 800 ஆக, மூன்றாவது நாளில் 1500 ஆக அதிகரித்தது என அவர் கூறினார்
சோனா இவ்வாறு பகிர்ந்த அனுபவம், தற்போது பலரிடமும் பரபரப்பை ஏற்படுத்தி, அதன் பரவலாக பரிந்துரை செய்யப்படுகிறது.