மறைந்த டேனியல் பாலாஜி நடித்துள்ள படம் ‘ஆர்.பி.எம்’. பிரசாத் பிரபாகர் இயக்கத்தில், கோவை சரளா, ஒய்.ஜி. மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, சுனில் சுகதா மற்றும் பலர் நடித்துள்ளனர். அனியன் சித்ரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜெ.செபாஸ்டியன் ரொசாரியோ இசையமைத்துள்ளார்.
கோல்டன் ரீல் இன்டர்நேஷனல் புரொடக்ஷனின் கீழ் கல்பனா ராகவேந்தர் தயாரித்துள்ளார். படம் பற்றி பிரசாத் பிரபாகர் கூறும்போது, ’டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. அதில் அவர் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது.
ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.” தற்போது, படப்பிடிப்பிற்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் டீசர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.