சென்னை: ஏ.ஆர். எண்டெர்டைன்மெண்ட் மற்றும் இயக்கத்தில் லோகேஷ் அஜில்ஸ், நவீன் சந்திரா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிவேக விசாரணை த்ரில்லர் படமான ‘லெவன்’ மே 16 அன்று திரைக்கு வருகிறது. ‘லெவன்’ படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் தமிழகத்தில் ஜி.என். அழகர்சாமி, கேரளாவில் இ4 என்டர்டெயின்மென்ட், கர்நாடகாவில் ஃபைவ் ஸ்டார் செந்தில், வெளிநாடுகளில் ஏபி இன்டர்நேஷனலும் வெளியிடுகிறார்கள்.

இப்படத்தில் டி.இமான் இசையமைத்த நான்கு வித்தியாசமான பாடல்கள் உள்ளன. ஏப்ரல் 29-ம் தேதி இந்த இசை ஆல்பத்தை சரிகம வெளியிடுகிறது. தமிழ் படத்தில் முதல்முறையாக ஆங்கிலத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன். மற்ற பாடல்களை ஆண்ட்ரியா, மனோ, ஜோனிடா காந்தி மற்றும் பலர் பாடியுள்ளனர்.