பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், சமீபத்தில் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் டிரௌசர் அணிந்த அந்த ஸ்டைலிஷ் ஃபேஷன் லுக், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2009ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘லக்’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்த ஸ்ருதிஹாசன், தமிழில் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார். தனுஷ், சூர்யா, விஜய், அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுடன் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.
இணையத்திலும் அவரது உன்னதமான ஃபேஷன் சென்ஸ், நேர்த்தியான ப்ரசென்ஸ் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக, ‘சலார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘சலார் 2’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவருடைய கதாபாத்திரத்துக்கு மீண்டும் ஒரு மாறுபட்ட அம்சம் இருப்பதாகத் தெரிகிறது.
ஸ்ருதிஹாசனின் புதிய புகைப்படங்கள், ஃபேஷனை விரும்பும் இளைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் கலகலப்பையும், பாராட்டுக்களையும் பெற்றுவருகின்றன. அவரது ஃபேஷன் தேர்வு, படவாய்ப்பு தேர்வு ஆகியவை, அவர் நடிகை மட்டுமல்ல, ஒரு ஸ்டைல் ஐகானும் என்பதை நிரூபிக்கின்றன.