சென்னை: இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ராஜமௌலி. அக்டோபர் 10ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர், படங்களில் எப்போதும் பிரம்மாண்டமான முறையில் கவனம் செலுத்துகிறார். எந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது இல்லை. ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ (2001) ₹4 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ₹12 கோடி வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது. 2003-ல் சிம்ஹாத்ரி படம் ₹7 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹26 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

2005-ல் சத்ரபதி படம் ₹13 கோடி பட்ஜெட்டில் ₹32 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. விக்ரமார்க்குடு ₹11 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹30 கோடியை ஈட்டியது. பின்னர் யமதொங்கா ₹14 கோடியில் ₹30 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. ராம் சரணுடன் மகதீரா ₹40 கோடி பட்ஜெட்டில் ₹150 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
2010-ல் மரியாதா ராமண்ணா ₹12 கோடியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 2012-ல் ஈ படம் ₹40 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹110 கோடி வசூலித்தது. பின்னர் பாகுபலி: தி பிகினிங் ₹180 கோடி பட்ஜெட்டில் ₹650 கோடி வசூலித்தது. பாகுபலி 2: தி கன்க்ளூஷன் ₹1810 கோடி வசூலித்து இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை படைத்தது. ஆர்ஆர்ஆர் ₹550 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ₹1258 கோடி வசூலித்து பெரும் வெற்றி பெற்றது.
ராஜமௌலி தற்போது SSMB29 படத்திற்காக மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் பணியாற்றி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு சுமார் ₹330 கோடி. ஹைதராபாத்தில் ₹25 கோடி மதிப்புள்ள மாளிகையில் வசித்து, ₹10 கோடி மதிப்புள்ள உயர்தர கார்கள் கலெக்ஷன் வைத்துள்ளார். ஒரு படத்திற்கு ₹100 கோடி சம்பளம் பெற்றுக்கொள்கிறார், மேலும் பட லாபத்தில் ஒரு பகுதியும் அவருக்கு வருகிறது.
#