பிரபல இயக்குனர் சங்கர், வேள்பாரி நாவல் குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார், இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் சங்கர், 1993ல் “ஜென்டில் மேன்” மூலம் இயக்குனராக களம் இறங்கினார்.
அவர் இயக்கிய “காதலன்”, “இந்தியன்”, “ஜீன்ஸ்”, “முதல்வன்”, “பாய்ஸ்”, “அந்நியன்”, “சிவாஜி” மற்றும் “எந்திரன்” போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அசுர வெற்றி பெற்றுள்ளன. சங்கரின் இயக்கத்தில் வெளியான “இந்தியன் 2” திரைப்படம், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது.
ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை. இப்போது, அவர் தனது முதல் தெலுங்கு திரைப்படம் “கேம் சேஞ்சர்” யை இயக்கி வருகிறார். இந்த சூழலில், சங்கர் “வேள்பாரி” நாவலை திரைப்படமாக உருவாக்க ஆசையாக இருப்பதாக கூறினார்.
கொரோனா காலத்தில் இந்த புத்தகத்தை படித்து மெய் சிலிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். சு. வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவலின் உரிமம் அவரிடம் உள்ளது. சங்கர் கூறியதாவது, “நவ யுக நாயகன் வேள்பாரி” என்ற நாவலின் மொத்த உரிமமும் சு. வெங்கடேசனிடம் தான் இருக்கிறது. ஆனால் அண்மையில் கண்ட திரைப்பட டிரெய்லரில் உள்ள பல காட்சிகள், அவரிடமிருந்து அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சங்கர் அந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். அண்மையில் “தேவரா” என்ற திரைப்படத்தின் டிரெயலரின் வெளியீடு குறித்த விவாதங்கள் இருக்கின்றன.