சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதுவரை சூர்யாவுடன் பணியாற்றிய சுதா கொங்கரா, இப்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு புரட்சிகரமான கதையை திரைப்படமாக கொண்டு வருகிறார்.
இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இது சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா ஒரு பேட்டியில்,
“சிவகார்த்திகேயன் சினிமாவை எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பதை அவர் தயாரிக்கும் படங்களை பார்த்தாலே தெரியும். அவரின் ஆர்வமும், ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மையும் அவரை ஸ்பெஷலான நடிகராக மாற்றியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பராசக்தி திரைப்படத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கிய நாள் முதல் இன்று வரை சிவகார்த்திகேயன் அதே அளவிலான ஆர்வத்துடன் இருக்கிறார் என்றும், அதனை பார்த்து தான் மிகவும் வியந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது காரணமாக ரசிகர்கள் கவலையில் இருந்தனர். ஆனால் தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக பொங்கல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட பராசக்தி, தற்போது மீண்டும் அந்த ரிலீஸ் திட்டத்தில் முன்னேறி வருகிறது. விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் போட்டி போட தயாராகும் பராசக்தி, சிவகார்த்திகேயனின் வெற்றிப் படம் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.