அறிமுக இயக்குனர் லோகன் இயக்கும் ஒரு படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நடிக்கவுள்ளார். இந்த படத்தை டிரீம் நைட் ஸ்டோரிஸ் என்ற புதிய பேனரில் டி. சரவணகுமார் தயாரிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார், சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.

நிகழ்வில் வீடியோ மூலம் பேசிய சுரேஷ் ரெய்னாவிடம், அவரது நண்பர் எம்.எஸ். தோனியும் இந்த படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது. அவர், “இதற்கு தோனி பதிலளிக்க வேண்டும்” என்றார்.
சென்னையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் சிவம் துபே கலந்து கொண்டார்.