சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது. இதற்காக சூர்யா தற்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்.
மும்பையில் அளித்த பேட்டியில், ‘கஜினி 2’ நடக்குமா என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்தார். அதில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ‘கஜினி 2’ படத்தைத் தயாரிக்க முடியுமா என்று கேட்டார். கண்டிப்பா செய்ய முடியும் சார் என்று சொல்லியிருக்கிறேன்.
பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது நடக்கலாம்” என்றார் சூர்யா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் உள்ளிட்ட பலர் நடித்த ‘கஜினி’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2005-ம் ஆண்டு வெளியான இப்படம் 2008-ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
அதையும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ‘கஜினி 2’ படத்தை தமிழில் சூர்யாவும், இந்தியில் அமீர்கானும் இணைந்து ஒரே நேரத்தில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது பேச்சு வார்த்தையில் இருக்கும் இப்படம் அடுத்த கட்டத்திற்கு செல்லுமா என்பது விரைவில் தெரியும்.