சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ஐந்து நாட்களில் 100 கோடி வசூலித்து, சூர்யாவிற்கு பெரிய வெற்றியை வழங்கியது. இதையடுத்து, சூர்யா தனது 45ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜெ பாலாஜி இயக்கி நடிக்கவும் செய்கிறார்.
த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ டைட்டில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் கார்த்தி நடித்த சர்தார் 2 திரைப்படமும் தீபாவளி ரிலீஸாக அறிவிக்கப்பட்டது.தீபாவளிக்கு சூர்யா 45, சர்தார் 2, பைசன், LIK உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

இதனால் சண்டை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்க சோர்வடைந்தது போல கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் பின்வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.படம் மிகப்பெரிய செலவில் தயாராகி வருவதால் தனியாக வெளியிடும் திட்டம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதனால் தீபாவளி ரேஸில் இருந்து விலகியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின்றன.இது உண்மையா அல்லது வதந்தியா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால்தான் தெரியவரும். ஆனால் தற்போது சூர்யா 45 படம்தான் தீபாவலிக்கு உறுதி செய்யபட்ட முக்கிய வெளியீடாக உள்ளது.