விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ். இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநராக பெயர் பெற்ற அனல் அரசு இயக்கியுள்ளார். பீனிக்ஸ் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ரிலீஸுக்கு முன்னதாக தளபதி விஜய் தனிப்பட்ட முறையில் இந்தப் படத்தை பார்த்து பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய், படக்குழுவை நேரில் அழைத்து சந்தித்துள்ளார். அவர்களின் உழைப்பையும், படத்தின் தரத்தையும் உயர்ந்து பேசினார். இதனை இயக்குநர் அனல் அரசு தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். விஜயின் பாராட்டு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதேவேளை, பீனிக்ஸ் படத்தின் ப்ரெஸ் ஷோவிலும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பலர் நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர். சூர்யாவின் நடிப்பு, அவரது ஆக்ஷன் காட்சிகளில் காட்டிய தைரியம், முதன்முறையாக ஹீரோவாக தேர்ந்தெடுத்த புரட்சி என அனைத்தையும் பாராட்டியுள்ளார்.
பதினெட்டு வயதான சூர்யா, ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், பீனிக்ஸ் அவரது முதல் ஹீரோ படம். இதில் நடிக்க தயாராக இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து தனது உடல் எடையை நூறு கிலோவிலிருந்து குறைத்துள்ளார். MMA பயிற்சியும் மேற்கொண்டார்.
சிலர் அவரை விமர்சித்தாலும், அவரின் உழைப்பை யாரும் மறுக்க முடியாது. தன் முதற்படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. இது அவரிடம் உள்ள நம்பிக்கையையும், தைரியத்தையும் காட்டுகிறது.
தளபதி விஜயின் பாராட்டும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீது உள்ள ஹைப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது. சூர்யாவிற்கு இது ஒரு வலிமையான ஆரம்பமாக அமையும் என்பது உறுதி.