கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள “தக்லைப்” திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில், அதன் மிரட்டலான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் “நாயகன்” படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து “தக்லைப்” என்ற வெற்றி வாய்ந்த பாணியில் ஒரு புதிய படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளமை படத்திற்கு மேலும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, தற்போது “தக்லைப்” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.