ஃபர்ஹான் அக்தர் இயக்கும் ‘டான் 3’ படத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். முதல் இரண்டு ‘டான்’ படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்தார். இப்போது மூன்றாம் பாகத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி முதல் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாராகி வருகிறது. இதில் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கிறார். ஹாலிவுட் ஸ்டண்ட்மேன்களைப் பயன்படுத்தி இதை பிரமாண்டமாக வடிவமைக்க உள்ளனர். இதில் ரன்வீர் சிங்கின் வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது தொடர்பான இறுதி பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும். இந்தப் படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் இந்தியிலும் அறிமுகமாகிறார். ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் அர்ஜுன் தாஸ் பிரபலமானவர்.
பவன் கல்யாண் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘ஓஜி’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.