மும்பை: ராகினி எம்.எம்.எஸ் மற்றும் ராகினி எம்.எம்.எஸ் 2 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தமன்னா பாட்டியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தில் ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2014-ல் வெளியான இரண்டாம் பாகத்தில் சன்னி லியோன் நடித்து, ‘பேபி டால்’ பாடல் தேசிய அளவில் ஹிட் ஆனது. இவ்விரு படங்களும் ஹாரர் மற்றும் சிற்றின்ப வகையைச் சேர்ந்தவையாக இருந்தன.
இப்போது, தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ராகினி எம்.எம்.எஸ் 3-ஐ ஹாரர்-நகைச்சுவை பாணியில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். முன்னணி கதாநாயகியாக தமன்னா பாட்டியாவை தேர்வு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது.
படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளது. ‘வான்’ படப்பிடிப்பின் போது கதையை கேட்ட தமன்னா, திகில் அம்சங்களை ரசித்து உடனே சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
முந்தைய பாகங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம், தேசிய அளவிலான ஹிட் பாடலுடன் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் தனது மார்க்கெட்டை வலுப்படுத்தி வரும் தமன்னா, தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ள “வான்” மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கும் ரோஹித் ஷெட்டி படத்திலும் நடித்து வருகிறார்.