சென்னை: தமன்னா சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கிறார். படங்கள், வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கும் தமன்னா, தற்போது நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ‘ஜெயிலர்’, ‘ஸ்த்ரீ 2’ போன்ற சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம் பெற்றுள்ளது.
![](https://vivegamnews.com/wp-content/uploads/2025/02/39-6.png)
இந்நிலையில், தனது கேரவனில் நடந்த சோகம் குறித்து தமன்னா பேசியது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், “கேரவனில் இருக்கும் போது எனக்கு பிடிக்காத ஒன்று நடந்தது.. கசப்பான அனுபவம். அதனால் மனவேதனை அடைந்து, கண்களில் கண்ணீர் வழிந்தது. அப்போது ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் அங்கு அழ முடியவில்லை. அப்போது, இது வெறும் உணர்ச்சி. கட்டுப்படுத்த வேண்டும். பின்னர் இந்த கடினமான உணர்ச்சியை நான் மகிழ்ச்சியாக மாற்றியது என்று கூறியுள்ளார்.