‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான், தற்போது சூப்பர் ஸ்டார் பிலிம்ஸ் சார்பில் ‘தமிழ்ப் பையன் இந்தி பொண்ணு’ படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் மான்சி கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமீன், உதயதீப், கும்கி அஷ்வின் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

“இரண்டு வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலில் என்னென்ன தடைகளை எதிர்கொள்கிறார்கள்? அவற்றை எப்படி சமாளித்து கலகலப்பாக இணைகிறார்கள்?” என்கிறார் சமீர் அலி கான்.
படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.