சென்னை : நடிகர் தனுஷுக்கு அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். எதற்காக என்று தெரியுங்களா?
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் நடிகர் அருண் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அருண் விஜய், “இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பை கண்டு வியந்தேன். இப்படத்தில் நடிப்பதை நினைத்தால் சுவாரசியமாக உள்ளது.
என் வீட்டில் இருப்பதைப் போலவே உணரச் செய்ததற்கு நடிகர் தனுஷுக்கு நன்றி” என்றார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த வணங்கான் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வணங்கான் படம் அருண் விஜய்க்கு நல்ல கம் பேக் படமாக அமைந்தது.