நடிகர் கவின் நடித்துள்ள கிஸ் திரைப்படம் வரும் செப்டம்பர் 19 அன்று திரைக்கு வரவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட வி.டி.வி கணேஷ், தனது வாழ்க்கையில் நடந்த முதல் முத்த அனுபவத்தை சிரிப்புடன் பகிர்ந்து கொண்டார். அந்த அனுபவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவர் கூறியதாவது: “நான் நண்பன் சரபோஜியுடன் வாரம் ஒருமுறை மகாபலிபுரம் கடற்கரைக்கு சென்று மது அருந்துவேன். அப்போது இரண்டு பிரான்ஸ் பெண்கள் அங்கு வந்து, தங்களின் உடைகளை பார்த்துக்கொள்ளச் சொல்லினர். அவர்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆசை தோன்றியது. அதில் ஒருவரிடம் ‘ஃப்ரென்ச் முத்தம் எப்படி கொடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டேன். அவர் சிரித்தபடி கடலில் குளிக்க வந்தால் கற்றுக்கொடுக்கிறேன் என்றார்” என நினைவுகூர்ந்தார்.

அவர் தொடர்ந்தபோது, “நான் துணிகளை கழற்றி அவர்களுடன் கடலுக்குள் சென்றேன். தண்ணீர் கழுத்து அளவிற்கு வந்தது. அப்போது அந்தப் பெண் எனக்கு முத்தம் கொடுத்தார். அந்த சந்தோஷத்தில் அதிகமாக தண்ணீர் குடித்து விட்டேன். எனக்கு கருப்பு நிறமென்றாலும், வேறுவிதமாக இருப்பதாக நினைத்தாரோ என்னவோ, என் வாழ்வின் முதல் முத்தம் அங்குதான் நடந்தது” என்றார்.
வி.டி.வி கணேஷின் இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை கேட்ட அனைவரும் சிரிப்பில் மூழ்கினர். ஆனால், யாருக்கும் தெரியாத பெண்மணியுடன் நடுக்கடலில் அவர் பகிர்ந்த அந்த அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.