சென்னை : பாஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறகு இந்தியாவில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி. இவரின் தந்தையும், பாடலாசிரியருமான சிவ சக்தி தத்தா(83) வயது மூப்பால் காலமானார்.
தனது கவித்துவமான வரிகளை கொண்டு பாகுபலி, RRR உள்பட பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களை அவர் எழுதியுள்ளார். சிவ சக்தி தத்தா மறைவுக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.