‘எம காதகி’ படத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சுஜித் சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். ஸ்ரீநிவாச ராவ் ஜலகம் தயாரித்துள்ள இப்படத்தை கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ளார்.
படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கூறும்போது, “இது ஒரு மரண இல்லத்தைப் பற்றிய படம். ஒரு கிராமத்தில் ஒரு இளம் பெண் இறந்துவிடுகிறாள். அவள் உடல் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறது. இது ஏன், எப்படி என்பது பற்றிய கதை. எனது கிராமத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளேன்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. ‘எமகாதகன்’ என்ற வார்த்தை பொதுவாக ஆண்களை சபிக்க பயன்படுத்தப்படுகிறது. “பிடிவாதமான பெண்களை ‘எமகாதகி’ என்பார்கள். வாழ்க்கை முடிந்தாலும் வீட்டை விட்டு வெளியேற மறுக்கும் பெண்ணின் கதை என்பதால் இந்த தலைப்பை வைத்துள்ளேன். வழக்கமான கதையில் இருந்து வித்தியாசமாக இருக்கும். அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்,” என்றார்.