ஐதராபாத் : இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் ஞானி நடித்துள்ள தி பாரடைஸ் படத்தின் முதல் கிளிம்பஸ் வீடியோ இன்று வெளியிடப்படுகிறது.
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று வெளியிட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நானி தற்பொழுது ஹிட் 3 மற்றும் தி பாரடைஸ் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.