நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் “ரவி மோகன் ஸ்டுடியோ”வை ஆரம்பித்து இருக்கிறார். அதன் லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துள்ளது. இப்படத்தில் ரவி மோகனுடன் எஸ்.ஏ. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் யோகி, இவர் முன்பு ‘டிக்கிலோனா’ மற்றும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ போன்ற படங்களை இயக்கியவர். படத்திற்கு “ப்ரோ கோடு” என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ‘அனிமல்’ மற்றும் ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இதில் ரவி மோகன், எஸ்.ஏ.சூர்யா மட்டுமல்லாமல் நான்கு நாயகிகள் மற்றும் இரண்டு பான்-இந்தியா நடிகர்கள் வில்லனாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. ஒளிப்பதிவாளராக கலைச்செல்வம், எடிட்டராக பிரதீப் ராகவ் பணியாற்றுவர். இயக்குனர் கார்த்திக் யோகி இந்த பட அறிவிப்பை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்புகள் உருவாகி வருகின்றன.