சென்னை : நடிகர் சனந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹார்ட்டின்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கிஷோர் குமார் இயக்கும் இப்படத்தில் ‘மகான்’, ‘பேட்ட’, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் சனந்த் நாயகனாகவும், மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.