சென்னை: விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை 27-ந் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .
‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.
அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது.இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் கடந்த மாதம் 28-ந் தேதி வெளியானது.
இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை 27-ந் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ‘சவதீகா’ பாடல் குறித்த அப்டேட் ஒன்றை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ள நிலையில் அறிவு இந்த பாடல்வரிகளை எழுதியுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும் பாடலின் சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் நாட்களில் இந்த லிரிக்ஸ் இணையத்தில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.