சென்னை: வீர தீர சூரன் திரைப்படத்தின் முதல் பாடலான கள்ளூரம் இன்று வெளியிடப்படுகிறது.
சித்தா’ பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2-ம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளனர்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் வீடியோக்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலை இன்று படக்குழு வெளியிடவுள்ளது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு கள்ளூரம் என தலைப்பு வைத்துள்ளனர்.