சென்னை: சண்முக பாண்டியன் நடித்த `படை தலைவன்’ பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
மறைந்த விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முக பாண்டியன் படை தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
“வால்டர்”, “ரேக்ளா” படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட ரிலீசை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். படத்தின் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.