ஹிந்தி நடிகர்கள் அர்ஜுன் கபூர், ரகுல் ப்ரீத் சிங், பூமி பட்னேகர் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மேரே ஹஸ்பண்ட் கி பீவி’. ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பக்னானி தயாரித்துள்ள இப்படத்தை முடாசர் அஜீஸ் இயக்கியுள்ளார். அடுத்த மாதம் 21-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல் காட்சியொன்று மும்பை அருகே உள்ள செட்டில் படமாக்கப்பட்டது.
திடீரென திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அர்ஜுன் கபூர், இயக்குனர் முடாசர் அஜீஸ், தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். “முழு கூரையும் எங்கள் மீது விழுந்திருந்தால், அது ஒரு பெரிய பேரழிவாக இருந்திருக்கும். இருப்பினும் இதில் பலர் காயமடைந்துள்ளனர்” என்று படத்தின் நடன இயக்குனர் விஜய் கங்குலி தெரிவித்துள்ளார்.