சென்னை: கொரோனா காலத்துக்குப் பிறகு ஓடிடி தளங்களுக்கு உலகளாவிய அளவில் ஏற்பட்ட விருப்பம் காரணமாக, வாரந்தோறும் பல்வேறு வகையான திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் மற்றும் டாக்குமெண்டரிகள் வெளியாகி வருகின்றன. இந்த வாரமும் (ஜூலை 18 முதல்) தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், கொரியன், ஸ்பானிஷ், சீன மொழிகளில் பல திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

தியேட்டரில் சிறப்பான வரவேற்பு பெற்ற தனுஷின் ‘குபேரா’ படம் அமேசான் பிரைம் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இது ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அதர்வா – நிமிஷா சஜயன் நடித்த ‘டி.என்.ஏ’ திரைப்படம், ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் முக்கிய ரிலீசாகும்.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘படைத்தலைவன்’ படம், டென்ட் கொட்டா தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இதில் கேப்டன் விஜயகாந்தின் முகம் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
சரவணன் நடித்த ‘சட்டமும் நீதியும்’ என்ற நீதிமன்றக் கதையை மையமாக கொண்ட வெப் சீரிஸ், ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.
இந்த வாரம் வெளியாவதாக இருக்கும் ஓடிடி வெளியீடுகளில் சில முக்கியமானவை:
- Kuberaa (தமிழ்) – Prime
- DNA (தமிழ்) – Hotstar
- Padaithalaivan (தமிழ்) – Tentkotta
- Sattamum Needhiyum (தமிழ் – வெப் சீரிஸ்) – Zee5
- Manidhargal (தமிழ்) – Aha
- Bhairavam (தமிழ்) – Zee5
- Special OPS S2 (ஹிந்தி) – Hotstar
- Strange New Worlds (ஆங்கிலம்) – Hotstar
- Trigger, The Cursed, Riff Raff, The Amateur, The Assessment – Netflix, Prime, Hulu உள்ளிட்ட பல தளங்களில்
இந்தத் தேர்வுகள் குடும்பம் முழுவதும் ஒரே வீடில் வீடியோ அனுபவத்தை பகிரக்கூடிய வகையில் உள்ளன.