கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது, இவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். இந்தப் படத்தை ‘இடி மின்னல் காதல்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலாஜி மாதவன் இயக்கவுள்ளார்.
மேலும் அவருடன் படத்தில் இணையும் தமிழ் மற்றும் கன்னட நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் இந்தப் படத்தை, ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் சூரஜ் சர்மா, கிருஷ்ணகுமார்.பி மற்றும் சாகர் ஷா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

பேருந்தில் நடந்த ஒரு குற்றத்தை விசாரிக்கும் உதவி காவல் ஆய்வாளரின் காட்சியை போஸ்டரில் காட்டியுள்ளதால், இந்தப் படம் புலனாய்வுக் கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
கன்னடத் திரையுலகில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிவராஜ்குமார், முதல் முறையாக உதவி காவல் ஆய்வாளராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.