மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள அஜித் குமார் நடித்த “விடாமுயற்சி” படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனிருத் இசையில், ஆண்டனி தாசன் பாடிய “சவாதிகா” பாடல் யூடியூபில் பல சாதனைகளைச் செய்து வருகிறது.கணவன் மனைவியின் பாசத்தை பிரதிபலிக்கும் இந்த பாடல் ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது. குறிப்பாக அஜித்தின் நடனம், கோட் சூட் போட்டு த்ரிஷாவுடன் ஆடியது வைரலாகி வருகிறது.
வின்டேஜ் அஜித்தை மீண்டும் திரையில் பார்க்க முடிந்ததற்காக இயக்குநர் மகிழ் திருமேனிக்கும், நடன இயக்குநர் கல்யாணிக்கும் ரசிகர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.”விடாமுயற்சி” திரைப்படம் 2025 பொங்கலுக்கு, ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு “துணிவு” திரைப்படத்திற்குப் பிறகு அஜித்தின் படம் திரைக்கு வருவது இது முதன்முறையாகும். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய தரத்தில் இருக்கும் என பெரும் நம்பிக்கை நிலவுகிறது.