சென்னை : நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் ஓப்பனிங் காட்சியில் எம்ஜிஆர் போட்டோவை காட்டிவிட்டு அதன் பிறகு தான் விஜய் முகத்தை காட்டுவது போல காட்சி இருக்கும் என கூறப்படுகிறது.
விஜய்யின் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதாலும், விஜய்யின் தவெக கட்சி 2026 தேர்தலில் போட்டியிடுவதாலும் ஜனநாயகன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதே நேரத்தில் விஜய் தீவிரமாக அரசியல் பேசி வருவதால் இந்த படத்திற்கு சில சிக்கல்களும் வரலாம் என தற்போதே பேச்சுகள் எழுந்து இருக்கிறது.
சமீபத்தில் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜய் எம்ஜிஆர் பற்றி பேசி இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது ஜனநாயகன் படத்திலும் எம்ஜிஆர் போட்டோ வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தின் ஓப்பனிங் காட்சியில் எம்ஜிஆர் போட்டோவை காட்டிவிட்டு அதன் பிறகு தான் விஜய் முகத்தை காட்டுவது போல காட்சி இருக்கும் என கூறப்படுகிறது.