பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, தனது திறமையால் நடிகையாக மாறி கமல்ஹாசன், தனுஷ், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது இவர் மிஸ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வரும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். நடிகை ஆண்ட்ரியா, அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலையும், வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க, ஆதவன் படத்தில் ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார். பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியாக பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், சரத்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் எதார்த்தமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தியுடன் வரலாற்று ஆராய்ச்சியாளரான நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தது மட்டுமில்லாமல், உன் மேல ஆசைதான் பாடலை தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து பாடி இருந்தார். இந்த பாடல் ஹிட்டடித்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. அதன் பின் மங்காத்தா, விஸ்வருபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை என ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.
நடிகை ஆண்ட்ரியாவிற்கு திடீரென படவாய்ப்பு குறைந்ததால், சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். இதன் வடசென்னை படத்தில் அமீரின் மனைவி சந்திரா என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆண்ட்ரியாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா தரமணி, வட்டம் போன்ற படங்களில் நடித்தார். அந்த படம் பெரிதாக எடுபடவில்லை.
இப்போது, நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பல போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். அவ்வப்போது தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, அவர் வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. தற்போது, வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வரும் அவ்வாறு ஒரு போட்டோவைக் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இதயத்தை பரிசாக கொடுத்து, லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.