‘தி ராஜா சாப்’ என்பது பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம். மாருதி இயக்கிய இந்த காதல் திகில் நகைச்சுவை படத்தை பீயூப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் டெல்லியை தளமாகக் கொண்ட ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் இந்த படத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. “ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவிற்குள் படத்தை முடித்து வெளியிடுவது, நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஒப்பந்தத்தை மீறியுள்ளது.

எனவே, இந்த படத்திற்காக நாங்கள் முதலீடு செய்த ரூ.218 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பித் தர உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ‘தி ராஜா சாப்’ படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.