சென்னை: ரஜினி-கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு 2027-ல் தொடங்கும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் ‘KH x RK’ என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தை அனிருத் இசையில் ரெட்ரோ பாடலான ‘ஆஜா ராஜா’ உடன் மாஸாக அறிவித்தனர்.
படத்தின் இன்ட்ரோ வீடியோ வைரலான நிலையில் சமீபத்திய ஒரு நேர்காணலில், அனிருத் இரண்டு நட்சத்திரங்களுடன் பணிபுரிந்த அனுபவத்தை ‘கற்பனைக்கு அப்பாற்பட்டது’ விவரித்தார். மேலும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில், “அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று நான் நினைக்கிறேன், அதைச் சுற்றி நிறைய பரபரப்பும் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.