சென்னை; கடன் பிரச்சினையால் தள்ளிப்போன ‘சப்தம்’ படம் இன்று ரிலீசாகி உள்ளது.
2009ம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ‘ஈரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.
அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த ‘வல்லினம்’ மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பார்டர்’, ‘குற்றம் 23’ திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.
‘ஈரம்’ படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவான சப்தம் திரைப்படம் இன்று வெளியானது.
சப்தம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 28) ரிலீசாக இருந்த நிலையில், கடன் பிரச்சனையால் வெளியாகவில்லை. இந்நிலையில், சப்தம் படம் இன்று ரிலீசானது.