சென்னை: தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’, தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் (31). அவரது தந்தை, கேரளாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் மோகனன், பாலிவுட் படங்களில் பணியாற்றியதால், மாளவிகா மோகன் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை மும்பையில் கழித்தார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் மும்பையில் நடந்த ‘பகீர்’ சம்பவம் குறித்து பேசியுள்ளார். இது இணையத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேட்டி:- ஒரு நாள், கல்லூரியில் இருந்து நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 7 மணி, முதல் வகுப்பு என்பதால் அந்த கம்பார்ட்மென்ட்டில் 3 பேரைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால், ஜன்னல் கம்பியில் முகத்தை வைத்து வெளியே பார்த்தேன்.

ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றபோது, திடீரென என் முன் ஒரு இளைஞன் வந்து, தன் முகத்தை என் அருகில் கொண்டு வந்து, ‘எனக்கு ஒரு முத்தம் கொடு’ என்று கேட்டான். இந்த எதிர்பாராத சம்பவத்தால் நான் அதிர்ச்சியடைந்தேன். அந்த வயதில், இந்த நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. நல்லவேளையாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு தப்பித்தோம்.
மும்பை இப்போது பாதுகாப்பான நகரம் என்று சொன்னாலும், நான் அங்கு படித்தபோது அப்படி இல்லை. பேருந்துகளிலும் ரயில்களிலும் மிகுந்த அச்சத்துடன் பயணித்தோம். மும்பை இப்போது பாதுகாப்பான நகரம் என்று நான் கூறுவேன். எனக்கு சொந்தமாக கார் உள்ளது. டிரைவரும் இருக்கிறார்.