மும்பை: “வருடங்களாக இருக்கும். 6 படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்த காலகட்டத்தில் சிறந்த இயக்குனர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன்” என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “லால் சிங் சத்தா படத்திற்கு முன்பே திரையுலகத்தை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். அப்போது நான் எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் இருந்தேன். கொரோனா காலத்தில் தான் நான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது, 18 வயதிலிருந்து இப்போது வரை முழு இளமை பருவம் உள்ளிட்ட அனைத்தையும் சினிமாவில் கவனம் செலுத்தி கடந்திருக்கிறேன். இதனால் எனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிட முடியவில்லை.
என்னுடைய முன்னாள் மனைவி ரீனாவாக இருந்தாலும் சரி, கிரண் ராவாக இருந்தாலும் சரி, நான் அவர்களுடன் நேரம் செலவழித்ததில்லை. கரோனாவின் போது தான், நாங்கள் எங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சினிமாவுக்காக அர்ப்பணித்துள்ளோம், எங்கள் குடும்பத்தை புறக்கணித்துள்ளோம் என்பதை நான் மிகவும் உணர்வுபூர்வமாக உணர்ந்தேன்.
இது என்னை மிகவும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 35 வருடங்களாக தேவையான படங்களில் நடித்து வருகிறேன். இப்போது நான் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, நான் இதை 56-57 வயதில் உணர்ந்தேன். இந்த முடிவை எடுக்கும்போது, சினிமா துறையை விட்டு விலகவேண்டாம் என என் குழந்தைகள் கேட்டுக் கொண்டனர். எனவே இந்த 10 வருடங்கள் எனது திரையுலக வாழ்க்கையின் இறுதி வருடங்களாக இருக்கும்.
6 படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்த காலகட்டத்தில் சிறந்த இயக்குனர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன்,” என்றார்.