தேசிங்கு பெரியசாமி இயக்கும் கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சிம்பு. ஆனால், படத்தின் செலவைக் கருத்தில் கொண்டு எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. முதலில் தயாரிக்கவிருந்த ராஜ்கமல் தயாரிப்பு பொறுப்பில் இருந்தும் பின்வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தேசிங்கு பெரியசாமி தனது கதையை அஜித்திடம் கூறியதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அஜீத் நடித்தால் தயாரிப்பாளரும் தயாராகி விடுவார் என்பதால் படம் தொடங்க வாய்ப்புள்ளதாக பலரும் தெரிவித்தனர். இந்த சர்ச்சை குறித்து சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி இருவரும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தற்போது இதற்கு மறைமுகமாக பதிலளித்துள்ளனர். தேசிங்கு பெரியசாமி தனது எக்ஸ் தளத்தில் சிம்புவுடன் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை மேற்கோள் காட்டி சிம்பு, “எது மதிப்பு மிக்கதோ அதையே காலம் சோதிக்கிறது” என்று கூறியுள்ளார். இதன் மூலம் சிம்பு-தேசிங்கு பெரியசாமி அணியினர் படம் தயாரிக்கப் போவது உறுதியாகியுள்ளது. அஜித் – தேசிங்கு பெரியசாமி கூட்டணி வெறும் வதந்தி என்றும் தெரியவந்துள்ளது.