சென்னை: தமிழில் கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மேக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் கார்த்திகேயா இயக்கத்தில், ‘மேக்ஸ்’ படத்தில் கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், சுனில், சரத் லோகித்சவா, ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவு சேகர் சந்திரா மற்றும் இசை P. அஜனீஸ் லோக்நாத். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படம் நாளை முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தை தமிழில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் இயக்குனர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங்கு பெரியசாமி, ஆர்.வி. உதயகுமார், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் காட்ரகட்டா பிரசாத், நடன இயக்குனர் ஷோபி ஆகியோர் கலந்துகொண்டனர்.