சென்னை: நடிகர் வெற்றி நடித்த முதல் பக்கம் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் வெற்றி அடுத்ததாக அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் முதல் பக்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒரு சீரியல் கில்லரை வெற்றி தொடர்ந்து தேடி வருவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் ஷில்பா மஞ்சுனாத், தம்பி ராமியா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் மகேஷ் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ்வரன் தேவதாஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.