மும்பை: ‘தடக் 2’ என்பது மாரி செல்வராஜ் இயக்கிய விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். ‘தடக்’ படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய மராத்தி படமான ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்காக வெளியிடப்பட்ட நிலையில், அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. முதல் பாகத்தைத் தயாரித்த கரண் ஜோஹரே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.
படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது. டிரெய்லர் எப்படி இருக்கிறது? – சாதி ஒடுக்குமுறையைப் பற்றிய இந்தி படங்களின் வழக்கமான வண்ணமயமான காதல் காட்சிகள், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஒற்றை வரியைச் சுற்றி குழு நடனக் கலைஞர்கள் நடனமாடுவது போன்றவை, எடுக்கப்பட்டிருப்பதை டிரெய்லரிலேயே தெளிவாக உணர முடிகிறது.

பரியேறும் பெருமாள் படத்தில், நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. அது நட்பைத் தாண்டிய ஒரு அழகான உறவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் டிரெய்லரிலேயே, இருவருக்கும் இடையே நடப்பது காதல் என்பது உறுதியாக நிறுவப்பட்டுள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு முத்தக் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியில் நல்ல படங்கள் வெளியாகி வரும் நேரத்தில், அது அத்தி மரம் பூப்பது போல மாறிவிட்டது. ஆகஸ்ட் 1-ம் தேதி அவர்கள் ஒரு நல்ல படத்தை எப்படி ரீமேக் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.