சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக திருநங்கை அப்சரா சிஜே நுழைந்துள்ளார். இவர் கேரளா மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா சிஜே போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார். மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுவரும் அப்சரா சிஜே மாடலிங் துறையிலும் தற்போது அசத்தி வருகிறார்.
மாடலிங் தவிர, சினிமாவிலும் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அப்சரா சிஜே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா சிஜே களமிறங்கி இருக்கிறார்.