சென்னை: சினிமாவை கைவிட்டு விஜய் கட்சியில் நடிகை த்ரிஷா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து திரிஷாவின் தாயார் விளக்கம் அளித்துள்ளார். அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்தார். அஜித்துடன் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துள்ளார்.
மோகன்லாலுடன் ராம் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் த்ரிஷா சினிமாவை கைவிட்டு அரசியலுக்கு வரப்போவதாகவும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அவர் இணையப்போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதுகுறித்து த்ரிஷாவின் தாய் உமாவிடம் கேட்டபோது, ”த்ரிஷா நடிப்பை கைவிடுவதாக கூறுவது உண்மையில்லை. அவருக்கு எந்த கட்சியிலும் விருப்பமில்லை. அரசியலில் ஈடுபடமாட்டார். இதெல்லாம் வதந்தி” என்றார்.