சென்னை: சினிமாவை விட்டு விலகுகிறார் என்று தன் பற்றிய வதந்திகளுக்கு திரிஷா விளக்கம் தெரிவித்துள்ளார்.
பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதால் சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் வெளியானது. பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதால் திரைத்துறையை விட்டு விலகுவதாக வெளியான தகவலுக்கு நடிகை திரிஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை திரிஷா வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், நான் சினிமாவை விட்டு விலகி விட்டேன். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு நேற்று தான் இரண்டு வயது நிறைவடைந்தது. அவ்வளவு தானா இன்னும் கற்பனைக் கதைகள் உள்ளதா என்று தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு கிண்டலாக அவர் பதிவிட்டுள்ளார்.
ஆதாரமற்ற செய்தி, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.