சென்னை : இயக்குனர் வெற்றி மாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வட சென்னை யுனிவர்ஸில் இருக்குமென தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் ரசிகர்கள் வெகு உற்சாகத்தில் உள்ளனர்.
நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனராம். இதனால், இப்படம் வட சென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், வட சென்னை யுனிவர்சில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படுகிறது. ராஜன் வகையறாவில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் வடசென்னை – 2 படத்தில் சிம்பும் தனுஷும் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது.
சிம்பு இருக்கும் ரசிகர்கள் உருவாக்கிய வட சென்னை 2 போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.