சென்னை: தமிழ் சினிமாவில் ‘லெஜண்ட்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தனது ஆடம்பர வாழ்க்கை முறையால் சமூக வலைதளங்களில் அடிக்கடி பேசப்படுபவர்.
சமீபத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், தற்போது தாயாரின் பிறந்தநாளையும் அதே பாணியில் கொண்டாடியுள்ளார். உலகின் மிக உயரமான ஹோட்டலில், 24 காரட் தங்க கிரீடம் பதிக்கப்பட்ட கேக் வெட்டி தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை “தூய அன்பு” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஆடம்பரம் மட்டுமின்றி பல்வேறு சர்ச்சைகளாலும் ஊர்வசி ரவுத்தேலா தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வருகிறார். தற்போதைய பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.